Day: February 6, 2021
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இனவாத இராஜ்ஜியமே உருவாகி உள்ளது- மனோ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராஜ்ஜியமே தற்போது உருவாகியுள்ளதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னார் பேருந்து நிலையத்திற்குமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்- சாணக்கியன் பகிரங்க அழைப்பு!
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாள் பவனி இன்று காலை வவுனியாவில் இருந்து ஆரம்பித்து மன்னாருக்குச்மேலும் படிக்க...
பொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி நகரை அடைந்தது!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னாரில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது. பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாளான இன்று வவுனியாவில் இருந்து காலையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கொறவப் பொத்தான வீதி ஊடாக மன்னார் மாவட்டத்துக்குச் சென்றிருந்தது. அங்கு ஆயிரக்காணக்கானோரின்மேலும் படிக்க...
தெற்கு லண்டனில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு- 9பேர் காயம்!
தெற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் குறைந்தது 9பேர் காயமடைந்துள்ளனர். குரோய்டோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க எந்த தகவலும் இல்லை என்று பெருநகர பொலிஸ்துறைமேலும் படிக்க...
தீவிரமான புதுவகைக் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும்: ஹன்ஸ் க்ளூக்
தீவிரமான புதுவகைக் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்ளூக் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அதிக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய, தீவிரமானமேலும் படிக்க...
அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் நுழையவோ வெளியேறவோ தடை!
அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் வருவதற்கோ அல்லது பிரான்ஸிலிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே செல்லவோ, இல்லை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து பிரான்ஸிற்குள் வரவோ, பெரும் கட்டுப்பாடுகளும் சோதனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்!
மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில், அந்த நாட்டு ஆசிரியர்களும் இணைந்துள்ளனர். யாங்கூன் நகரிலுள்ள டாகோன் பல்கலைக்கழகத்தில் சுமார் 200 ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி, இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஒத்துழையாமை இயக்கத்தின் அடையாளமான சிவப்புமேலும் படிக்க...
பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் பங்களிப்பை நிறுத்த அமெரிக்கா முடிவு!
பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் அமெரிக்காவின் பங்களிப்பை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்துள்ளார். இதற்கமைய ஏமனில் சவுதி இராணுவப் படைகளுக்கு அளித்து வந்த ஆதரவை மீளப் பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜோ பைடன் கூறுகையில்,மேலும் படிக்க...
அதிகாரங்கள் மக்களை காக்கவே பயன்பட வேண்டும் – வெற்றிமாறன்
டெல்லி விவசாயிகளின் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பல பிரபலங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “கோரிக்கைகளை கவனிக்கத் தவறியதன் விளைவுதான் இந்த போராட்டம். அரசாங்கத்திற்கு மக்களே அதிகாரத்தினை வழங்கியுள்ளனர். இந்த அதிகாரங்கள்மேலும் படிக்க...
சென்னைக்கு வருகைதரும் சசிகலாவுக்கு 12 இடங்களில் வரவேற்பு!
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து, தற்போது விடுதலையாகியுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா எதிர்வரும் 8ஆம் திகதி சென்னைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை வரும் சசிகலாவை வரவேற்பதற்கு அ.ம.மு.க மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலமேலும் படிக்க...
‘குருந்தகம’ என்பதே குறுந்தூர் மலையாம்- நிரூபித்துக் காட்டவும் தயார் என்கிறார் மேதானந்த தேரர்
‘குருந்தகம’ என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளதாகவும், இதனை தம்மால் நிரூபிக்க முடியுமென எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இணையவழி ஊடாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “வடக்கு கிழக்கில்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கைக்கு சிறந்ததாக அமையும்- ஜெய்சங்கர்
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்ததாக அமையுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை தலைவர்களை அண்மையில் சந்தித்தவேளை நல்லிணக்கமேலும் படிக்க...
பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் நோக்கிப் பயணம்!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் செல்கின்றது. வவுனியாவில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை மன்னார் நோக்கிப் பயணித்த பேரணி, நண்பகல் 12 மணியளவில் மன்னார் மடுச் சந்தியைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர் குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் (06/02/2021)
யாழ் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜேர்மனி டிலிங்கனை (Dillingen) வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற குணரெத்தினம் (தியாகர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,மேலும் படிக்க...