Day: December 28, 2020
ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமானார்!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று (திங்கட்கிழமை) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், இரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1992-ம் ஆண்டு ரோஜா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.மேலும் படிக்க...
தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்
தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்மேலும் படிக்க...
கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில் !
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியிலான காரணங்களை பரிசீலித்துமேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் பின் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. ‘கொல்லாதேமேலும் படிக்க...
சவேந்திர சில்வா மற்றும் கமால் குணரட்னவிற்கு பதவி உயர்வு
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவும் இலங்கை இராணுவத்தின் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்மேலும் படிக்க...
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்மேலும் படிக்க...
சீனாவில் மர்பநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் உயிரிழப்பு
சீனாவில் மர்பநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்தமேலும் படிக்க...
கமெரூனில் கோர விபத்து: 37 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!
கமெரூனின் மேற்கு கிராமமான நேமலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் உயிரிழந்ததுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 70 ஆசனங்கள் கொண்ட இந்தப் பேருந்து, மேற்கு நகரமான ஃபோம்பனில் இருந்து தலைநகர் யவுண்டேவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றுமேலும் படிக்க...
புத்தாண்டு முதல் அமுல் படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

புத்தாண்டு முதல் அமுல்படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள், குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதன்போது, பிரித்தானியாவில் இருந்து பரவக்கூடிய புதிய வகை கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்மேலும் படிக்க...
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது – ராஜ்நாத் சிங்
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இமாசல பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற விழாவில் ஒன்றில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
ஐ.நா.விடம் புதிய கோரிக்கையை முன் வைத்தார் சிறீதரன்
இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...