Main Menu

புத்தாண்டு முதல் அமுல் படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

புத்தாண்டு முதல் அமுல்படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள், குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் இதன்போது, பிரித்தானியாவில் இருந்து பரவக்கூடிய புதிய வகை கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

எந்தெந்த மாவட்டத்தில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது அங்கு என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளது.

அத்தோடு, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், திரையரங்குகளில் முழு அளவில் இருக்கைகள் நிரப்புதல், புத்தகக் கண்காட்சியை நடத்துதல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ள நிலையில், புத்தாண்டுக்கான புதிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பகிரவும்...