Day: July 20, 2020
உடல்நலக் குறைவு காரணமாக சவூதி அரேபிய மன்னர் வைத்தியசாலையில் அனுமதி
சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சவூதி அரேபிய அரசின் அதிகாரபூர்வ செய்தி முகமை ஸ்பா தெரிவித்துள்ளது. 84 வயதாகும் மன்னர் சல்மான் பித்தப்பை வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலமேலும் படிக்க...
மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்
அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் ஓர் அங்கமே மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வுமேலும் படிக்க...
பாடசாலை செல்லும் சிறுவர்கள் மூலமாக கொவிட்-19 தொற்று பரவாது: ஆய்வில் தகவல்
பாடசாலை செல்லும் சிறுவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவ வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. பின்லாந்து, சுவீடன் ஆகிய இரு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஒரு வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்டவர்கள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : புதிய உச்சமாக ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 40 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் மொத்தமாக 11 இலட்சத்து 18 ஆயிரத்து 107மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து – இன்று முதல் மனிதர்களிடம் பரிசோதனை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பரவலை தடுக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. ஐதராபாதில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை என்.ஐ.வி. எனப்படும் தேசிய வைராலஜிமேலும் படிக்க...
யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32)மேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வி அமைச்சு
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி குறித்த அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலின் பின்னர் கல்வியமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பைமேலும் படிக்க...
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் ஆடி அமாவாசை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) பிதிர்க் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். அத்தோடு ஆலயத்தில் நெய் விளக்குகளை ஏற்றி பெருமானுக்கு மோட்ச விளக்குகளை ஏற்றி பக்தர்கள் நிறைவேற்றினர். அத்தோடு இறந்தவர்களின் ஆன்மா கிடைத்ததற்காக அடியவர்கள்மேலும் படிக்க...


