Main Menu

பாடசாலை செல்லும் சிறுவர்கள் மூலமாக கொவிட்-19 தொற்று பரவாது: ஆய்வில் தகவல்

பாடசாலை செல்லும் சிறுவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவ வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.

பின்லாந்து, சுவீடன் ஆகிய இரு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஒரு வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் மூலமாக சமூகப்பரவல் ஆகும் வாய்ப்பு மிக குறைவு என இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் சுவீடன் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பின்லாந்தின் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகமும் இதனை வெளியிட்டுள்ளது.

மற்ற பணிகளில் இருப்போரை ஒப்பிடும் போது, சிறுவர் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் மூலம் பரவுவது குறைவு என இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், சிறுவர்கள் மூலமாக பெரியவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகக் குறைவு அல்லது முற்றிலும் இல்லாதது என்றே கூறலாம் என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...