Main Menu

20ஐ தோற்கடிப்பதில் உறுதியாக இருக்கின்றோம்- சஜித்

20ஐ தோற்கடிக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்திலுள்ள குறைகளை நாம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுவோம்.

இது எதிர்க்கட்சியொன்றின் வகிபாகமாகவே நாம் கருதுகிறோம். இன்று 20ஐ நிறைவேற்றிக் கொள்ளவே அரசாங்கம் தீவிரம் காட்டுகிறது.

இதனால்தான் கொரோனாவைக் கூட பெரிதாக கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது. எவ்வாறாயினும், 20ஐ தோற்கடிக்க நாம் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

இது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்று ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம். இப்படியான இந்த சட்டமூலத்தை நாம் நிச்சயமாக தோற்கடித்தே ஆக வேண்டும்.

19ஆவது திருத்தச்சட்டத்தை தற்போது ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு படுத்துகிறார்கள். இது முற்றிலும் பிழையான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

உண்மையில் 19ஆல், நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றுதான் நாம் வலியுறுத்தி வருகிறோம்.

19 பிளஸுன் ஊடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இதனைவிடுத்து, யாருடைய அதிகாரத்தையும் குறைத்து இன்னொருவருக்கு அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் என நாம் விரும்பவில்லை. 19 தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியாக பொய்களை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...