Main Menu

இந்தியப் பிரதமருடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள கூட்டமைப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததற்கு அமைய கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விரைவில் இருதரப்பு கலந்துரையாடலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும்  இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி காணொளி வாயிலாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

எனவே கூட்டமைப்புடனான இந்த சந்திப்பின்போது 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பேசப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...