தெமட்ட கொடையில் பெருமளவான போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது
தெமட்டகொடை பகுதியில் 39 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 05 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
