Main Menu

இன்றைய மோசமான நிலையில் இருந்து பிரெஞ்சு மக்களை மீட்பது மட்டுமே எனது இலக்கு – மரின் லூ பன்

ஜனாதிபதித் தேர்தற்களம் மிகவும் சூடுபிடித்திருக்கும் நிலையில் மரின் லூப்பனின் தேசியப் பேரணிக் கட்சியான RN (Rassemblement National) இலிருந்து முக்கியமான இருவர், மரின் லூப்பனின் நேரடிப் போட்டியாளரான எரிக் செமூருடன் இணைந்துள்ளனர்.

ஏற்கனவே RN இன் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான ஜெரோம் ரிவியர் (Jérôme Rivière) மரின் லூப்பனிடம் இருந்து விலகி சச்சரவாளர் எரிக் செமூர் பக்கம் சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது, இன்னுமொரு ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரும் மரின் லூப்பனின் நம்பிக்கைக்கு உரியவருமான ஜில்பேர் கொலார் (Gilbert Collard) எரிக் செமூரிடம் சென்று கான் சந்திப்பில் இணைந்துள்ளார்.

இவர்கள் எல்லாரும் அரசியல் தேர்ச்சியற்று எரிக் செமூரிடம் சென்று துரோகம் புரிந்துள்ளனர். இது அரசியல் துரோகம். ஆனால் நான் என் வாழ்வில் பல துரோகங்களைச் சந்தித்துள்ளேன். ஜனாதிபதித் தேர்தலின் முக்கிய தருணத்தில் துரோகம் இழைத்துள்ளனர். நான் எதற்கும் துவண்டு விடப் போவதில்லை. பிரெஞ்சு மக்களின் நலனும், அவர்களை இன்றைய மோசமான நிலையில் இருந்து மீட்பதுவும் மட்டுமே எனது இலக்கு. அதனை நோக்கி நான் திடமாகவே முன்னேறி வருகின்றேன் என RN கட்சியின் தலைவியும் ஜனாதிபதி வேட்டபாளருமாகிய மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...