Main Menu

2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்!

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் நோக்கிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கும் நோக்கிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் படி 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

பிலிப்பைன்சில் ஒரு கிலோ அரிசி இலங்கை மதிப்பில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அதனை வாங்க சிரமப்படும் ஏழை மக்களுக்கு அரசின் இந்த திட்டம் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிரவும்...