Main Menu

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம்

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு முதல் ஏழு தசாப்பதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த துஸ்பிரயோகத்தில் 18 வயதிற்குட்பட்ட 216,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் 10 முதல் 13 வயதுடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய 2018 ஆம் ஆண்டின் இறுதியில் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு 2.5 வருட விசாரணைக்குப் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்த முக்கிய அறிக்கை வெளியிட்டது.

மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதாவது 80 சதவீதம் பேர் சிறுவர்கள் என குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்-மார்க் சாவே ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, மதகுருமார்கள் பல ஆண்டுகளாக சிறுவர்களுக்கு எதிராக பரந்த அளவிலான துஷ்பிரயோகங்களை மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...