Main Menu

19 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் – மைத்ரிபால சிறிசேன

20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனநாயக்த்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கத்திற்கு நன்மதிப்பு கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளதுடன் பல யோசனைகளையும் முன்வைத்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்ஷர்கள் முழுமையாக பதவிவிலக வேண்டும் என நாட்டு மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு போராட்டம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய நிறைவேற்று சபை ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக அமைச்சர்களை நியமிப்பது அவசியம் என்றும் இடைக்கால அரசாங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் மைத்ரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார்.

பகிரவும்...