18 எம்எல்ஏக்ளின் பதவி பறிபோக காரணமே திமுகவும் தினகரனும்தான்! – எடப்பாடி
தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதிமுக,திமுக மற்றும் அமமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நாகமலைபுதுக்கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
அப்போது பொய்களை கூறி மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. திமுகவிற்கும், அமமுகவிற்கும் தொடர்பு இருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது என குற்றம்சாட்டினார்.
.
18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோக காரணம் திமுகவும், தினகரனும் தான். மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் சேர்ந்து மக்களிடம் நாடகம் நடத்தி வருகின்றனர்.
நாடகம் நடத்துவற்கு 2 பேருக்கும் நோபல் பரிசு கொடுக்கலாம். பெரிய தலைவர் போன்று தங்கதமிழ்ச்செல்வன் பேசி வருகிறார். மக்கள் கட்டளையை நிறைவேற்றுவது தான் என் வேலை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..