Main Menu

144 தடையுத்தரவு – பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

144 தடையுத்தரவு இன்று மாலை 6 மணிக்கு மேல் அமுலாவதால், பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சுயக் கட்டுப்பாடு அவசியம்,144 தடையுத்தரவு அமுல்படுத்தப்படும் நிலையில் பொதுமக்கள் இதை எப்படி எதிர்கொள்வது என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதாவது, “மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விளக்கமாக தெளிவாக கொரோனா வைரஸ் நோயினுடைய தன்மையைத் தெரிவித்திருக்கின்றார். ஏற்கெனவே தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்குபொதுமக்கள்முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயைப் பொறுத்தவரைக்கும் வேகமாகப் பரவக்கூடிய ஒரு நோய். சுமார் 187 நாடுகளிலே இந்த நோய் பரவியிருக்கின்றது.

மாவட்ட எல்லைகள் மூடுவது மட்டுமல்ல,பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து தங்களைத் தனிமைப்படுத்தி இந்த நோயைத் தடுக்கின்ற பணிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். அதோடு அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லலாம்.” என கூறினார்.

பகிரவும்...