Main Menu

ஹொங்கொங் மாவட்ட மன்றத் தேர்தல்: ஜனநாயகத்தை ஆதரிக்கும் தரப்புக்கு அதிகபட்ச வாக்குகள்

ஹொங்காங்கில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட மன்றத் தேர்தலில், ஜனநாயகத்தை ஆதரிக்கும் கட்சியினர் வெற்றிப் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 320 இடங்களை அந்தக் கட்சியினர் பெற்றுள்ளதாக முதற்கட்ட பெறுபேறுகளின் படி தெரியவந்துள்ளது.

சீனாவை ஆதரிக்கும் தரப்பினருக்கு 48 இடங்கள் கிடைத்துள்ளதுடன், சுயேட்சை வேட்பாளர்கள் 24 இடங்களைக் கைபற்றியுள்ளனர்.

Democratic Alliance for the Betterment and Progress of Hong Kong எனும் சீனாவை ஆதரிக்கும் கட்சி, 156 இடங்களை மாத்திரமே வென்றுள்ளது.

ஜனநாயகத்தை ஆதரிக்கும் தரப்பினர் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகளை பெற்றிருப்பது அங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன ஆதரவாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட யுவென் லொங் (Yuen Long) எனும் கிராமப்புறப் பகுதியிலும் 6 இடங்களை ஜனநாயக கட்சியினர் கைபற்றியுள்ளனர்.

பகிரவும்...