174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்குத் துபாய் இளவரசர் நேரில் பாராட்டு
174 பயணிகளின் உயிரைச் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றிய FlyDubai வானுார்தியின் தலைமை விமானி ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை விமானி ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்த துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது, அவசரக் காலத்தில் துரிதமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அவரின் வீரத்தையும் திறமையையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
