Main Menu

ஹொங்கொங்கில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க சீனா தீர்மானம்!

ஹொங்கொங்கில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக தனது மிகப்பெரிய அரசியல் கூட்டத்தில் சீனா அறிவித்துள்ளது.

‘தேசபக்தர்கள்’ பொறுப்பில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஹொங்கொங்கின் தேர்தல் முறையை மாற்றியமைப்பதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.

இது பிராந்தியத்தில் கருத்து வேறுபாட்டை அரசாங்கம் இனி பொறுத்துக் கொள்ளாது என்பதற்கான அறிகுறியாகும்.

ஒரு வாரம் வரை இயங்கும் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தின் போது இதுகுறித்து விவாதிக்கப்படும். தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான சட்டமியற்றுபவர்கள் கூடியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், ஹொங்கொங் முடிவைத் தவிர, மத்திய அரசாங்கத்திடமிருந்து பொருளாதார வளர்ச்சி இலக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...