Main Menu

ஹாங்காங் ஆட்சி தலைவருடன் சீன அதிபர் சந்திப்பு

ஹாங்காங் நகரில் மக்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அப்பகுதிக்குட்பட்ட ஆட்சியின் தலைமை நிர்வாகி கேரி லாம்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா

இந்த மசோதாவுக்கு எதிராக 6 மாதங்களாக நீடிக்கும் போராட்டம்

சீனாவின் எல்லைக்குட்பட்ட தன்னாட்சி உரிமம் கொண்ட ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஹாங்காங் போராட்டம்

இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி சுமார் 6 மாதங்களாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் வார இறுதியில் மட்டுமே நடந்த போராட்டங்கள், வார நாட்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் இறக்குமதி-ஏற்றுமதி பொருட்காட்சியின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை  சந்தித்த கேரி லாம் ஹாங்காங்கில் தற்போது நிலவி வரும் சூழல் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

ஹாங்காங்கில் அமைதி ஏற்படவும் இயல்புநிலை திரும்பவும் கேரி லாம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் பாராடும் தெரிவித்த ஜி ஜின்பிங் அவரது திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

பகிரவும்...