Main Menu

ஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது!

ஸ்பெயினில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 442பேர் பாதிப்படைந்ததோடு, 17பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, கடந்த ஜூன் 12ஆம் திகதிக்கு (16பேர்) பிறகு, ஸ்பெயினில் அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 2 இலட்சத்து 97 ஆயிரத்து 625பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். 28 ஆயிரத்து 385பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், தற்போது முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்பெயினில், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்காக, சமூக விலகள் விதிகள் மற்றும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது.

பகிரவும்...