Main Menu

ஸ்பெயினில் பொதுப் போக்குவரத்தின்போது முகமூடிகள் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது!

பொதுப் போக்குவரத்தின் போது முகமூடிகள் அணிவது கட்டாயமாக இருக்கும் என ஸ்பெயின் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடுமையான வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியான, இந்த நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில், ‘அரசாங்கம் 6 மீ முகமூடிகளை விநியோகிக்கும். முக்கியமாக போக்குவரத்து இடங்களில், 7 மீ முகமூடிகளை உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

கட்டுப்பாடுகளின் போது செய்த தியாகங்களின் பலன்களை ஸ்பெயின் இப்போது அறுவடை செய்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார சேதங்களைச் சமாளிக்க பிராந்திய அதிகாரிகளுக்கு உதவுவதற்காக 16 பில்லியன் யூரோக்கள் நிதிக்கு தனது அரசாங்கம் ஒப்புதல் அளிக்கும்’ என கூறினார்.

ஸ்பெயினில் ஏறக்குறைய 47 மில்லியன் மக்கள் மார்ச் 14ஆம் திகதி முதல் உலகின் மிகக் கடுமையான வைரஸ் கட்டுப்பாட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

இதில், சுமார் 48 நாட்கள் வீட்டுச் சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று (சனிக்கிழமை) 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து பொது வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் பெரியவர்கள் உணவு, மருந்து வாங்க அல்லது நாய்யை வெளியில் கூட்டி செல்லவோ மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அதிகாரம் பெற்றனர்.

சிலதினங்களுக்கு முன்னதாக, நடைமுறையில் உள்ள ஊரடங்கினை எளிதாக்கும் ஒரு கட்டமாக, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஏனைய உலக நாடுகளை போல, ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கை தளர்த்தவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்த நிலையில், இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன. எனினும், சமூக தொலைவு நடைமுறையில் உள்ளது.

பகிரவும்...