Main Menu

ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்: பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள்!

சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, பொலிஸாரையும் தாக்கியுள்ளனர்.

பார்சிலோனா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸார் மீது கற்களை வீசியும், பொது சொத்துகளை அடித்து நொறுக்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸையும் ஸ்பெயினின் முடியாட்சியையும் அவமதித்து டுவீட் செய்ததற்காக பப்லோ ஹஸல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவரை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மற்றொரு ராப்பரான எல்ஜியோவுக்கு செவ்வாய்க்கிழமை ஆறு மாத சிறைத் தண்டனை கிடைத்த பின்னரே கோபம் அதிகரித்து வருகிறது.

கடந்த 10 நாட்களில், பார்சிலோனா, வலென்சியா, பில்பாவ் மற்றும் மட்ரிட் உள்ளிட்ட ஸ்பெயின் முழுவதும் உள்ள நகரங்களில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களில் சேர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் ஹசலின் வீட்டுப் பகுதியான கட்டலோனியாவில் குவிந்துள்ளனர். எதிர்ப்பாளர்களில் பெரும்பாலோர் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பகிரவும்...