Main Menu

ஸ்பெயினின் கலீசியா பிராந்தியத்தில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், ஸ்பெயினின் பிராந்தியமான கலீசியாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக விலகல் சாத்தியமில்லை என்றால், வீதி மற்றும் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் போன்ற பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது வடமேற்கு பிராந்தியமாகும். ஆனால் கேனரி தீவுகள் அதன்பிறகு பின்பற்றப்பற்றி வருகின்றன.

மேற்கு ஐரோப்பாவில் மிக மோசமான தொற்று வீதத்தை ஸ்பெயின் எதிர்கொள்கிறது. ஜூன் மாதத்தில் 150க்கும் குறைவாக இருந்த நாளொன்றுக்கான பாதிப்பு, ஒகஸ்ட் முழுவதும் 1,500 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

பகிரவும்...