Main Menu

ஷெங்கன் அல்லாத நாடுகளுக்கான எல்லைகளைத் திறக்க பிரான்ஸ் திட்டம்!

பிரான்ஸ் தனது எல்லைகளை ஷெங்கன் மண்டலத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கும் என உட்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் மற்றும் உட்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டானர் ஆகியோர் இதனைத் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர்கள் கூறுகையில், ‘இந்தத் திறப்பானது படிப்படியாக இருக்கும். மூன்றாம் நாடுகள் ஒவ்வொன்றிலுமான சுகாதார நிலைமை ஏற்ப இது மாறுபடும்’ என கூறினர்.

ஜூன் 15ஆம் திகதி முதல் பிரான்ஸ் மற்ற ஷெங்கன் நாடுகளுடனான அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளையும் நீக்கும் என்பதை காஸ்டானர் மற்றும் லு டிரையன் உறுதிப்படுத்தினர்.

பகிரவும்...