Main Menu

வேளாண் சட்டமூலங்கள் : அரசின் அழைப்பை விவசாயிகள் நிராகரிப்பு!

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், குறித்த அழைப்பை விவசாயிகள் மறுத்துள்ளனர்.

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் அரசின் அழைப்பை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். இது குறித்து டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, “நாட்டில் 500க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் உள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது. பிற குழுக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை.

அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...