Main Menu

வெற்றி பெறும் தறு­வாயில் சுதந்­திர கட்­சி­யு­ட­னான பேச்சு: பஷில்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடை­யி­லான கூட்­டணி தொடர்­பான பேச்­சு­வார்த்தை வெற்றி பெறும் தறு­வா­யி­லேயே உள்­ளது. தற்­போது சின்னம் குறித்து முரண்­பா­டுகள் எழுந்­தி­ருந்­தாலும்,  இரு தரப்பும் இவ்­வி­டயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடி தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­படும் என்று பொது­ஜன பெர­மு­னவின் போஷகர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருடன் நேற்று இடம்­பெற்ற சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் தெரி­விக்­கையில், 

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள அர­சியல் கட்­சி­களின் செய­லா­ளர்கள், சுயா­தீன குழுக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கும் இடை­யி­லான சந்­திப்பே நடை­பெற்­றது. சாதா­ரண முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கும், சுற்றுச் சூழ­லுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கும் உரிய நட­வ­டிக்­களை அனைத்து கட்­சி­களும் முன்­னெ­டுக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்­றைய (நேற்­றைய)  கலந்­து­ரை­யா­டலில் பிர­தா­ன­மாகக் காணப்­பட்­டது.

பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்கள் இதன் போது எழுந்­தன. எவ்­வா­றா­யினும் இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் சாதா­ரண முறை­யிலும் ஜன­நா­யக முறை­யிலும் இடம்­பெற வேண்டும் என்­பதே பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­கவும் காணப்­ப­டு­கி­றது. தேசிய தேர்­த­லி­னூ­டா­கவே நாட்டு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் தொடர்ந்தும் இழு­பறி நிலையே காணப்­ப­டு­கி­றது. ஐ.தே.க. சார்பில் எவர் கள­மி­றங்­கி­னாலும் எமக்கு சவால் அல்ல. ரணில், சஜித் மற்றும் கரு ஆகி­யோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்­பாளர் ஒருவர் கள­மி­றங்­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களும் காணப்­ப­டு­கி­ன்றன. எவ்­வா­றா­யினும் அவற்றை நாம் பொருட்­ப­டுத்தப் போவ­தில்லை.

நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை இரத்து செய்­வ­தாக இருந்தால் தான் போட்­டி­யி­டு­வ­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய குறிப்­பிட்­டுள்­ளமை கவ­னிக்கத்தக்­கது. தேர்தல் காலத்தில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது என்று குறிப்­பி­டு­வது வெறும் தேர்தல் பிர­சா­ர­மே­யாகும். தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் இத­னையே குறிப்­பிட்டு ஆட்­சிக்கு வந்தார். ஆகவே இவ்­வி­ட­யத்தில் மக்கள் உரிய தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடை­யி­லான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தறுவாயிலேயே உள்ளது. தற்போது சின்னம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை எடுப்போம். எவ்வகையிலும் கூட்டணி தோல்வியடையாது. நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

பகிரவும்...