Main Menu

விடுமுறைகள் ஐரோப்பாவிற்குள் இருப்பது பாதுகாப்பானது – ஜனாதிபதி மக்ரோன்

இன்று இவ்ளினிலுள்ள Poissy (Yvelines) நகரத்தின் பாடசாலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி  எமானுவல் மக்ரோன் ஊடகங்களின் கேள்விகளிற்கும் பதிலளித்திருந்தார்.

கோடை விடுமுறைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் வினவப்பட்டது.

«எங்களிற்கு விடுமுறைகள் இருக்குமா என்ற கேள்விக்கு இப்பொழுது என்னிடம் பதிலில்லை. இன்னும் சிலகாலம், காத்திருக்க வேண்டும். ஜுன் மாதத் தொடக்கத்தில் இது பற்றி ஓரளவிற்குத் தெரியவரும். தொற்று நோயின் தாக்கம் மட்டுமே இதனை முடிவு செய்யமுடியும். நாங்கள் இன்னமும் யுத்தத்தில் வெற்றியடையவில்லை. வைரஸ் தொற்றினை ஓரளவிற்குக் குறைத்துள்ளோம். அப்படி எமக்கு விடுமுறை சாத்தியமானால், ஐரோப்பாவிற்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. அதையும் சுருக்கி பிரான்சிற்குள்ளேயே இருப்பது இன்னமும் பாதுகாப்பானது» என ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

இரண்டு நாட்களிற்கு முன்னர், உள்ளிருப்பிலிருந்து வெளிவருவதற்கு மே 11 என்ற திகதியே சந்தேகத்திற்குரியது என்றும், எந்தவிதமான விமானச் சீட்டுக்களையோ, வேறுவிதமான பதிவுகளையோ செய்யவேண்டாம் என்றும் பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...