Main Menu

வாட்ஸ்அப் 2020… Dark Mode, Face Unlock .! அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்

நம் ஆறாம் விரலான மொபைல் போனில் உள்ள முக்கிய ரேகையாக திகழ்வது வாட்ஸ் அப். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட இந்த செயலியில் அடிக்கடி அப்டேட்ஸ் வருவது வழக்கமான ஒன்று.

ஆனால் எதிர்வர உள்ள 2020 புத்தாண்டு முதல் மேலும் பல சிறப்பு அப்டேட்ஸ்களை தன்னகத்தே கொண்டு வந்து அசத்த உள்ளது வாட்ஸ் அப் செயலி.

அடுத்த வாரம் முதல் டார்க் மோட், ஃபேஸ் அன்லாக் எனப்படும் முக அங்கீகாரம், டெலிட் செய்த மெசெஜ்களை திரும்ப கொண்டு வருவது, குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் லாஸ்ட் சீன் டைமிங் காட்டும் வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்.

டார்க் மோட்:

வாட்ஸ் அப்பில் நீண்ட காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வசதி Dark Mode. வாட்ஸ் அப்பில் உள்ள செட்டிங்க்ஸ் மெனுவிற்கு சென்றால், டார்க் மோட் என்ற அம்சம் இருக்கும். அதை தேர்வு செய்தால், கண்ணினியில் வருவதுபோல சிஸ்டம்-வொயிட் டார்க் மோட் வரும்.

சமீபத்திய பீட்டா உருவாக்கங்களின்படி, வாட்ஸ்அப் பயனர்களுக்கு Dark Mode 3 விருப்பங்களை வழங்கும். அவை லைட் தீம், டார்க் தீம் மற்றும் பேட்டரி சேவர் மோட்.

ஃபேஸ் அன்லாக்:

ஸ்மார்ட் போன்களில் செல்ஃபி மூலம் எவ்வாறு ஃபேஸ் அன்லாக் செய்கிறோமோ அதே முறையை இந்த அம்சம் ஒத்திருக்கும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஃபேஸ் ஐடி ஆதரவுடன் வருவதால், இந்த அம்சம் பயன்படுத்த எளிதாக இருக்கும். இது உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை மற்றவர்கள் உங்கள் அனுமதியின்றி பார்ப்பதை தடுக்கும். இந்த ஃபேஸ் அன்லாக் அம்சமானது வாட்ஸ்அப்பில் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாக மாறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மல்டிபுள் டிவைஸ் சப்போர்ட்:

தற்போது ஒரு ஸ்மார்ட்போனில், ஒரு வாட்ஸ் அப் ஐடியை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த முறையின் மூலம் ஒரு பயனாளர் தனது வாட்ஸ் அப் ஐடியை ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன் சாதனங்களில் பயன்படுத்த முடியும். அப்படி வேறு வேறு சாதனங்களில் பயன்படுத்த வாட்ஸ் அப் registration notifications கொடுப்பதும் அடங்கும்.

டெலிட் மெசெஜ்:

எந்த ஒரு மெசெஜையும் டெலிட் செய்த பின்னர் அதனை இந்த ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் கொண்டுவர முடியும். மேலும் ஸ்னாப்சாட் பாணியில் வாட்ஸ்அப் ஒரு சுய அழிக்கும் செய்தி அம்சத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அம்சம் அமலுக்கு வந்தால் “அனைவருக்கும் நீக்கு” என்பதிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு செய்தியை தானே டெலிட் செய்வதற்கான நேர இடைவெளிகளை பயனர்களே தேர்வு செய்யும் படி-1 மணிநேரம், 1 நாள், 1 வாரம், 1 மாதம் மற்றும் 1 வருடம் என பல ஆப்ஷன்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

லாஸ்ட் சீன் :

தற்போது அனைவருக்கும் அல்லது கான்டக்ட்ஸ் லிஸ்டில் உள்ளவர்களுக்கு மட்டும் கடைசியாக வாட்ஸ் அப்பிற்கு எப்போது வந்தோம் என்பதை காணும் வசதியை பயனர்கள் செட் செய்ய முடியும். ஆனால் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள லாஸ்ட் சீன் ஆப்ஷனில், குறிப்பிட நண்பர்களுக்கு மட்டும் கடைசியாக நாம் வாட்ஸ் அப்பிற்கு எப்போது வந்தோம் என்பதை காண்பிக்குமாறு செட் செய்யலாம்.

பகிரவும்...