Main Menu

வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், ஃபேஸ்புக் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் வருடாந்திர விளம்பர கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

ட்விட்டரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது.

View image on Twitter
View image on Twitter
View image on Twitter

Coming Soon to @WhatsApp

– WhatsApp Status (Stories) to get Ads in 2020

– WhatsApp for Businesses to get richer messaging format options

– WhatsApp product catalog to be integrated with existing Facebook Business Manager catalog

h/t + ? @Olivier_Ptv
at #FMS19pic.twitter.com/Z5LsbADNbP— Matt Navarra (@MattNavarra) May 21, 2019

இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்தது ஆகும். இது வாட்ஸ்அப் (ஐ.ஜி.) க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மூன்றவாது திட்டத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும். இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் விளம்பரங்கள் தோன்றுவதை போன்று செயல்படும். 
இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் அதிகளவு ரிச்சர் ஃபார்மேட்களை புகுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்குவது மட்டுமின்றி வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் தளமாக வாட்ஸ்அப் இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் நினைக்கிறது.

பகிரவும்...