Main Menu

வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்

சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.

அங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் குறித்த வைரஸ் பரவளினால் பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்தமையினைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தால் குறித்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் உல் செல்வதற்கோ உள்ளிருந்து யாரும் வெளியேறுவதற்கோ அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 76 நாட்கள் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைக்கு முகம் கொடுத்து வந்த மக்கள் பட்டினி, மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடி என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவளின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.

அதனடிப்படையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மரணித்து வரும் நிலையில் ஒற்றை இலக்கங்களிலான மரணங்கள் சீனாவில் தேசிய ரீதியாக பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் 76 நாட்கள் முடக்கப்பட்டிருந்த வுஹான் நகரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

குறித்த நகரின் எல்லைகள் நேற்று நள்ளிரவு முதல் திறந்துவிடப்பட்ட நிலையில், மக்கள் மாகாணத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 11 மில்லியன் மக்களை னுள்ளடக்கிய குறித்த நகரம் கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி முடக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மகிழ்ச்சியுடன் தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுவதன் அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் இதுவரை குறித்த வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி 3,333 பேர் மரணித்துள்ள அதேவேளை இன்றைய தினம் 2 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...