Main Menu

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோரை ஏற்கனவே அங்கு இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், பெருமிதம் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ரஷ்யாவை சார்ந்திருப்பது முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று கருதப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி விண்கலங்கள் ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது ஒரு குழுவினரை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல ஒரு தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...