Main Menu

வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்துகின்றது: மனித உரிமைகள் குழு

வாக்குமூலம் பெற வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதை மற்றும் அவமானத்திற்கு உட்படுத்துகிறது என மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், வடகொரியாவின் தடுப்புக்காவல் அமைப்பு, மக்களை ஒரு விலங்கை விடக் மதிப்பு குறைவாக நடத்துவதாக கூறுகின்றது.

டசன் கணக்கான முன்னாள் வட கொரிய கைதிகளிடம் மேற்கொண்ட நேர்காணல்களுக்கு பிறகே இந்த தகவலினை மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ளது.

கைதிகளில் சிலர் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை முழங்கால்களிலோ அல்லது தங்கள் கால்கள் குறுக்கே இருக்கும்படி, தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகக் கூறினர்.

தடுப்புக்காவல் நிலையங்களில் மனிதாபிமானமற்ற நிலைமைகள் என்று அழைக்கப்படுவது பெரும்பாலும் சித்திரவதைக்குரியது என அதிர்ச்சியூட்டும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இரகசியமான நாடாக பார்க்கப்படும் வடகொரியாவில், குற்றவியல் நீதி முறைமை பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. ஆனால் அங்கு, பரவலான உரிமை மீறல்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...