Main Menu

வடக்கு, கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவேன் – வவுனியாவில் சஜித்!

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை பெற்றுக்கொடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெவ்வேறாக அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக, தனிதனியான ஜனாதிபதி செயலணிகளை உருவாக்கி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.

மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், பிரதேச செயலகங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்.

தேசிய உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் வகையில், விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கால்வாய்கள் மற்றும் குளங்களை புனரமைப்பதுடன், புதிய நீர்பாசனத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

அதன்மூலம் சிறுபோக மற்றும் பெரும்போக விவசாயத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...