Main Menu

லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை!

பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை புரிந்துள்ளார்.

மகளீருக்கான பலோன் டி ஆர் விருதை அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ பெற்றுள்ளார். அவர் மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தியிருந்தார்.

கடந்த 2015 இல் இறுதியாக பலோன் டி ஆர் விருதை வென்ற மெஸ்ஸி, தற்போது ஆறாவது முறையாக இந்த விருதை வென்று ஆறு முறை பலோன் டி ஆர் விருது வென்ற வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அவரது போட்டி வீரராக பார்க்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட அதிக முறை பலோன் டி ஆர் வென்று சாதித்துள்ளார் மெஸ்ஸி.

இந்த விருதை பெற்றதன் பின் பேசிய மெஸ்ஸி, “என் முதல் விருதை இதே பாரிஸில் வென்று 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அப்போது என் மூன்று சகோதரர்களுடன் இங்கே வந்தது இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது எனக்கு 22 வயது. அந்த தருணத்தில் நான் என்ன நடக்கிறது என்பதை சிந்திக்க முடியாதவனாக இருந்தேன்” என குறிப்பிட்டார்.

பலோன் டி ஆர் பட்டியலில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி முதல் இடத்தை பிடித்த நிலையில், இரண்டாம் இடத்தை லிவர்பூல் அணியின் விர்ஜில் வான் டிஜிக் பிடித்துள்ளார்.

ரொனால்டோ மூன்றாம் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு முதல் மகளீர் பலோன் டி ஆர் விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த முறை அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ பலோன் டி ஆர் விருதை வென்ற போதும், அவரால் விருதை பெற நேரில் சமுகமளிக்க முடியவில்லை.

அவர் விருது வென்றது குறித்து காணொளியில் போது “இது மிக அற்புதமான வருடம். என் சக அணியினர், பயிற்சியாளர்கள், அமெரிக்க உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகியோருக்கு பெரிய அளவில் நன்றி கூற சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

21 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான சிறந்த வீரர்கள் விருதான கோபா ட்ராபியை மாத்திஜிஸ் டி லைட் வென்றுள்ளார். அவர் உலகக்கிண்ண நாயகனான கைலியன் பாப்பே-வை விட இந்த விருதை வென்று சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...