Main Menu

பிரான்ஸில் பல பகுதிகளில் வாகன எரிபொருள் தட்டுப்பாடு!

பிரான்ஸின் பல பகுதிகளிலுள்ள வாகன எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதில் முதலாவதாக மார்செய் நகரம் பெரும் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மிகவும் விரைவாக மற்றைய பகுதிகளையும் தாக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

தொழில்முறை சார்ந்தோருக்கான, டீசல் வரிக்குறைப்பினை, அரசாங்கம் இரத்துச் செய்வதாக அறிவித்திருக்கும் நிலையில், பல தொழில்முறை சார்ந்தோர், முக்கியமாகக் கட்டுமானத்துறையினர், பேராட்டங்களை ஆரம்பித்து, எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக மையங்களை முடக்கி உள்ளனர்.

பிரான்சின் வடபகுதியில் ஆரம்பித்திருக்கும் போராட்டம், பிரான்ஸின் மொத்த எரிபொருள் தேவைகளைப் பெரும் தட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையிலேயே பிரான்ஸின் பல பகுதிகளிலுள்ள வாகன எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினத்துடன் நாடு முழுவதும் உள்ள நான்கு மில்லியன் மக்கள், எரிவாயு கட்டணம் 0.6 சதவீத விலையேற்றத்தை சந்தித்தனர்.

பகிரவும்...