Main Menu

ரோஹிங்கியா அகதிகளை சர்வதேசம் மறந்துவிடக் கூடாது – ஐ.நா

ரோஹிங்கியா அகதிகளை சர்வதேச சமூகம் மறந்துவிடக் கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பங்களாதேஷின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்க் லோவ் கோஹ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், மியன்மாரில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து, சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சமடைந்துள்ள ரோஹிங்ய அகதிகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இவர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்வதற்கு பில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...