Main Menu

ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான சூப்பர் ரிச் வரி உயர்வு

சூப்பர் ரிச் எனப்படும், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் மிகவும் குறைவு, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாயிலிருந்து, 5 கோடி ரூபாய் வரையிலான வருமானம் உடையவர்களுக்கு 39 விழுக்காடும், 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 42 புள்ளி 7 விழுக்காடும், சூப்பர் ரிச் வரி அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சக அதிகாரி, சூப்பர் ரிச் வரி மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் குறைவு என விளக்கமளித்திருக்கிறார். அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில், 50 விழுக்காடாக இருப்பதாகவும், சீனா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் தலா 45 சதவிகிதம் என்ற அளவில், சூப்பர் ரிச் வரி இருப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில், இரண்டு பிரிவுகளாக, யாரும் பாதிக்கப்படாத வகையில், சூப்பர் ரிச் வரி மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சக அதிகாரி தெரிவித்திருக்கிறார். 

பகிரவும்...