Main Menu

ஏர் இந்தியாவின் 100சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு?

ஏர் இந்திய நிறுவனத்தின் 100சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அந்நிறுவனத்தின் கடன் சுமை, எரிபொருள் விலை ஏற்ற – இறக்கம் உள்ளிட்டவற்றால் ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் ஏர் இந்தியா விற்பனை நடவடிக்கைகளை முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்பட வேண்டிய பங்குகளின் அளவு குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏர்இந்தியாவின் பங்குகளை முழுமையாக வாங்கிக் கொண்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்க எவராவது முன்வந்தால் அதனைக் கொடுத்துவிட மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களும் வாங்க வாய்ப்பாக விமானப் போக்குவரத்துத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...