Main Menu

ராணியின் உரையில் பிரெக்ஸிற் மற்றும் சுகாதார சேவை முக்கியத்துவம் பெற்றன

பிரெக்ஸிற் மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவை அரசாங்க நிகழ்ச்சி நிரலில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ராணி தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாகும், மேலும் மேலதிக நிதி சட்டத்தில் தேசிய சுகாதார சேவை (NHS) சேர்க்கப்படும் என்ற உறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ் உரையில் அறிவிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட அம்சங்களில் ஏழு பிரெக்ஸிற்றுடன் சம்பந்தப்பட்டவை.

மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ராணி, தனது அரசாங்கத்தின் முன்னுரிமை ஜனவரி 31 அன்று பிரெக்ஸிற்றை வழங்குவதாகும். அதேவேளை அமைச்சர்கள் மக்களின் முன்னுரிமைகளை வழங்கும் உள்நாட்டு வேலைத்திட்டத்தையும் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

வர்த்தகம், வேளாண்மை, மீன்வளம், குடிவரவு, நிதி சேவைகள் மற்றும் தனியார் சர்வதேச சட்டம் தொடர்பான பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்குள் அடங்குகின்ற ஏழு அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னராக நாளை வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்ற வாக்ககெடுப்புக்கு விடப்படும்.

ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான தனது துறையை அரசாங்கம் மூடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அரசாங்கத்தின் திட்டங்களை உள்ளடக்கிய ராணியின் உரை குறித்துப் பதிலளித்த தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின்; பல வாக்குறுதிகள் தொழிற்கட்சியின் கொள்கையைப் பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமரின் வாக்குறுதிகளால் திசைதிருப்பப்பட்டவர்கள் மிகவும் ஏமாற்றமடைவார்கள் என்று நான் அஞ்சுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் பொன்ரிஸ் ஜோன்சன் கூறுகையில்; வாக்காளர்களுக்கு மகத்தான கடமை உணர்வு உள்ளதைத் தாம் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

இந்த ஐக்கிய ராச்சியத்திற்கான ஒரு புதிய பொற்காலம் இப்போது எட்டியுள்ளது என்று அவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதுடன் அதை வழங்க அரசாங்கம் தயாராகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

பகிரவும்...