Main Menu

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகிறது!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகிறது.

இறுதி நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 299,941ஆக உள்ளது.

கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, வைரஸ் தொற்றால் 9,263பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 115பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள இரண்டாவது நாடான ரஷ்யாவில், வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 2,837பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 220,974பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 63,166பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...