Main Menu

ரக்பி உலகக்கிண்ண தொடர் ஜப்பானில் ஆரம்பம்: இரசிகர்கள் கொண்டாட்டம்

இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ரக்பி உலகக்கிண்ண தொடரின், 9ஆவது அத்தியாயம் ஜப்பானில் கோலாகலமாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண திருவிழா, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டு, முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் மோத வேண்டும். இறுதியில் குழுவில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் ஏற்பபாடு செய்யப்பட்டுள்ள பனிரெண்டு நகரங்களில் அமைந்துள்ள பிரமாண்ட மைதானங்களில், குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இத்தொடரின் ஆரம்ப போட்டியில், தொடரை நடத்தும் ஜப்பான் அணியும், ரஷ்யா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரக்பி உலகக்கிண்ண தொடர், ஆசிய நாடொன்றில் நடைபெறும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ரக்பி உலகக்கிண்ண தொடரில், நியூஸிலாந்து அணி 3 முறையும், அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் தலா இரண்டு முறையும், இங்கிலாந்து ஒரு முறையும் உலக்கிண்ணத்தை வென்றுள்ளது.

பகிரவும்...