Main Menu

யேமன் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து உதவி – சவுதி

யேமனுக்கு பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்பட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து வழங்குவதாக சவுதி தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சவுதி ஊடகத்துறை அமைச்சர் துர்கி அல் ஷபனா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் “யேமன் நாட்டின் நலன்களை கருத்திற்கொண்டு அந்நாட்டு குடிமக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவதற்கும் யேமன் கட்சிகள் முயற்சிப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.

மேலும் பிராந்தியத்தில் யேமன் நிலையான அமைதியைப் பெறவும், அந்நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்கவும் சவுதி தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. யேமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல் ரீதியாக முக்கிய தீர்வாக இந்த ஒப்பந்தம் உள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் யேமனில் புதிய சூழல் உருவாகும் எனவும், சவுதி அரேபியா உங்களுடன் துணை நிற்கும் என்றும் இந்த ஒப்பந்தம் குறித்து சவுதி இளவரசர் முகமது சல்மான் தெரிவித்தார்.

யேமனில் தென் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் யேமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...