Main Menu

பிரான்ஸில் ஆறாவது நாளாக போக்குவரத்து முடக்கம்!

பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், ஆறாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப் போயிருந்தன.

இந்த நிலையில் தொழிற்சங்க தலைவர்கள் நேற்று, அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிராகரித்து போராட்டத்தைத் தொடருவதாக உறுதியளித்தனர். இதனால் இன்றைய தினமும் ஆறாவது நாளாக போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

மேலும், போராட்டத்திற்கு பின்னர், இதுவரை 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும், பயணிகள் தங்கள் பயணங்களை பிற்போடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இப்போராட்டம் இந்த வார இறுதியில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளன.

இந்த போரட்டம், பரிஸ் மற்றும் பிற நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் வெளிநடப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...