Main Menu

மொஸ்கோ தேர்தல்: மூன்றில் ஒரு பகுதியை இழந்தது ஆளும் கட்சி

மொஸ்கோ தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆதரிக்கும் ரஷ்யாவின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி, ஏராளமான இடங்களை இழந்துள்ளது என்று RIA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய தேர்தல் ஆணைக்குழு ஏராளமான எதிர்க்கட்சி வேட்பாளர்களை பதிவு செய்ய மறுத்ததைத் தொடர்ந்து தலைநகரை முற்றுகையிட்டு ஜூலை நடுப்பகுதியில் இருந்து போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகின.

இந்நிலையில் இன்று கிட்டத்தட்ட முழுமையான தேர்தல் தகவல்கள் என்ற அடிப்படையில், ஐக்கிய ரஷ்யா கட்சி கைப்பற்றியிருந்த பல இடங்களில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துவிட்டதாக RIA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலில் பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள 45 இடங்களில் 26 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட, இந்த முறை, கம்யூனிஸ்ட் கட்சி 13 இடங்களை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மற்ற இரண்டு எதிர்க்கட்சியான யப்லோகோ கட்சி மற்றும் சிகப்பு ரஷ்யா கட்சி தலா மூன்று வெற்றிகளைப் பெற்றதாக RIA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பகிரவும்...