Main Menu

மொடேர்னாவின் கொரோனா தடுப்பூசி: 160 மில்லியன் டோஸை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு

அமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னாவின் 160 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இது விரைவில் இறுதி செய்யப்படலாம் என சுகாதார ஆணையாளரின் ஊடக பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக குறித்த நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.

குறித்த சோதனை தொடர்ந்தால் இந்த செயல்திறன் விகிதம் குறைய வாய்ப்புள்ளது என சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களுடனான தடுப்பூசியின் செயல்திறன் பற்றிய செய்திகளுக்குப் பின்னர் குறித்த தடுப்பூசி வெற்றிகரமாக இருந்தால் 405 மில்லியன் டோஸ் வரை வாங்க தீர்மானித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

200 மில்லியன் டோஸ்க்கு மேலதிகமாக 100 மில்லியன் டோஸ் கோருவதற்கான ஒரு விருப்பம் இது என்றும் ஃபைசர் ஒப்பந்தம் மேற்கொண்ட மருந்து நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எந்த தடுப்பூசி பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் கிடைக்கக்கூடியது என்பது தெளிவில்லை அதனால்தான் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக சுகாதார ஆணையாளரின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...