Main Menu

போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி!

போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து மாதங்களுக்குள் 346 பேரைக் கொன்ற நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் ஒப்புதலை எதிர்பார்த்து, அமெரிக்கன் எயார்லைன்ஸ் டிசம்பர் 29 ஆம் திகதி வணிக நடவடிக்கைகளுக்காக மக்ஸ் விமானத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விமானத் தடையை நீக்கும் உத்தரவில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேவையான மாற்றங்களை விவரிக்கும் ஒரு வானூர்தி செல்லத்தக்க நிலை குறித்த உத்தரவை நிறுவனம் வெளியிட உள்ளது.

பகிரவும்...