Main Menu

முல்லைத்தீவு வாக்களிப்பு- முழு விபரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 360 ஆக உள்ளது. இதில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கையைத் தவிர்த்தால் இன்று வாக்களித்திருக்க வேண்டிய வாக்குகள் 74 ஆயிரத்து 979 ஆகும்.

அதில், இன்று செலுத்தப்பட்ட வாக்குகள் 57 ஆயிரத்து 175ஆக உள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 76.25வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இன்றைய வாக்களிப்பு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய எவ்வித வன்முறைகளும் இன்றி நடைபெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் 136 வாக்கெடுப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் பிரதான வாக்கெண்ணும் நிலையமான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணி நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பகிரவும்...