Main Menu

“தேவ­னாக நீங்கள் உரு­வெ­டுக்க வேண்டும்”: ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு சஜித்­துக்கு சிவ­மோகன் அழைப்பு..!

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு அமைச்­சரும் ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன் அழைப்பு விடுத்­துள்ளார்.

நேற்று முல்­லைத்­தீ­வுக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரே­ம­தாச பல்­வேறு மக்கள் வேலைத்­திட்­டங்­களை மக்­க­ளிடம் கைய­ளித்­தி­ருந்தார் . இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் சிவ­மோ­கனும்  கலந்­து­கொண்­டி­ருந்தார் .  இந்த நிகழ்­வு­க­ளின்­போது  உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன் இந்த அழைப்­பினை  விடுத்­துள்ளார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில், இந்த நாடு மீண்டும் ஒரு ஜனா­தி­பதி தேர்­தலை சந்­திக்க காத்துக் கொண்­டி­ருக்­கின்­றது ஏற்­க­னவே ஒரு ஜனா­தி­பதித் தேர்தல் மூலம் பாரிய அரா­ஜ­கங்­களை எமது மக்கள் மீது அவிழ்த்­து­விட்ட அரசை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­கு­ரிய வேலை­களை நமது தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து முன்­னெ­டுத்­தனர். அதேபோல் மீண்டும் இங்கே ஒரு தேர்தல் வர இருக்­கின்­றது. மீண்டும் எம்­மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அரா­ஜ­கங்­களை மீட்டி  பார்க்க எங்கள் மக்கள் இனியும் தயா­ராக இல்லை. அது­மட்­டு­மல்ல வலுக்­கட்­டா­ய­மாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் போன்று மீண்டும் ஒரு தடவை இவ்­வா­றான சம்­ப­வங்­களை எம்­மக்கள் மீது பரீட்­சித்­துப்­பார்க்க நாங்­களும் தயா­ராக இல்லை.    20க்கும் மேற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் காணாமல் ஆக்க செய்­யப்­பட்ட அந்த  அரசை மீண்டும் ஒரு தடவை பரீட்­சித்துப் பார்க்க நாங்கள் தயா­ராக இல்லை.

ஆனால் கடந்த தேர்­தலில் நாம் ஒரு ஜனா­தி­ப­தியை கொண்டு வந்தோம் நமது மக்கள் கௌர­வ­மாக வட­கி­ழக்கு இணைந்த மாநி­லத்தில் சுய­கௌ­ர­வத்­துடன் சொந்த நிலத்தில் வாழ்­வ­தற்­கான ஒரு அர­சியல் யாப்பு மாற்­றத்தை நாம் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்தோம் ஆனால் அதுவும் நடந்­த­பா­டில்லை.  நாளை  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அதற்­கான ஒரு பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வர இருக்­கின்­றது. இருக்­கின்ற போதிலும் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக இங்கு நான் நிற்­கின்றேன்.

எனவே இந்த அர­சியல் யாப்பு மாற்றம் நடை­பெ­றுமோ இல்­லையோ தெரி­யாது.  ஏற்­க­னவே நாங்கள் கொண்டு வந்த இந்த ஆட்­சியின் மூலம் எமது மக்­களின் உரி­மைகள் 4 திணைக்­க­ளங்­களால்  உருக்­கு­லைக்­கப்­பட்­டது  என்­பது வெளிப்­ப­டை­யான உண்­மை­யாகும்.

வீட­மைப்பு அதி­கார சபை மட்­டும்தான் எமது மக்­க­ளுக்­கான சேவை­களை எமது மக்­க­ளுடன் சேர்ந்து சிங்­கள மக்­க­ளுக்கு சம­மாக தமி­ழர்­க­ளுக்­காக முஸ்­லிம்­க­ளுக்­காக தமது சேவை­களை வழங்­கி­யது. வன­வள பிரிவு அத­னுடன் சேர்ந்து வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம், தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­களம் மகா­வலி அதி­கார சபை எமது மக்­களின் மீதான அடக்­கு­மு­றை­களை விட்­டு­வி­ட­வில்லை.  அதற்­கான கார­ணங்கள் பல இருக்­கலாம் ஆனாலும் நாங்கள் இன்று  கேட்­பது உங்­க­ளு­டைய பெய­ராகும்.   எமது  அமைச்சர் சஜித் பிரே­ம­தாச வின்  பெயர் எதிர்­வ­ரு­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான பெய­ராக  தற்­போது பெய­ரி­டப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றது.

நிச்­ச­ய­மாக நீங்கள் வர வேண்டும். அது­மட்­டு­மல்ல தமி­ழர்­க­ளுக்­கான கௌர­வ­மான ஒரு தீர்வில்  நீங்கள் கரி­சனை காட்ட வேண்டும் என்­பதை இந்த மக்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆகவே நல்­லதை நாம் எதிர்­பார்க்­கி­றோமோ அந்த நல்­லது நடை­பெற வேண்டும் என்­ப­துதான் எங்­க­ளு­டைய கரி­ச­னை­யாகும். 1948ல் இருந்து மீண்டும் மீண்டும் பலரை எதிர்­பார்த்து ஏமாந்த தமிழ் இனம் தனது உரி­மைக்­காகப் போரா­டிய இந்த தமி­ழினம் இன்று இறு­தியில் ஆயுத மௌனிப்பில்  வந்து நிற்­கின்றோம்.

இந்த இடத்தில் ஒரு தேவ­னாக நீங்கள் உரு­வெ­டுக்க வேண்டும்.  தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு நீங்களாகவே முன்வந்து இந்த உரிமைகளைப் பெற்று தரவோ அல்லது எமது மக்களுடன் இணைந்து இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் முன்னிற்க வேண்டும் எனக் கேட்டு கொள்கின்றேன் எங்களது ஆதரவு தொடரும் உங்களது செயற்பாடுகளும் எங்களுக்காக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

பகிரவும்...