Main Menu

மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்தார் உசைன் போல்ட்!

உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகின் அதிவே ஓட்ட வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களையும், உலக மெய்வல்லுனரில் 11 தடவைகள் சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தார்.

அத்துடன், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.

இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு மெய்வல்லுனர் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற 33 வயதான உசேன் போல்ட் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில்,

“எனது பயிற்சியாளர் கிளென் மில்ஸ் மீண்டும் என்னிடம் வந்து, மெய்வல்லுனர் போட்டியில் களமிறங்கும் படி சொன்னால், அதற்கு தயார். ஏனெனில் அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

நாம் இதை செய்யப்போகிறோம் என்று அவர் கூறினால், அது சாத்தியமே என்பதை அறிவேன். எனவே, அவர் என்னை மெய்வல்லுனர் விளையாட்டுக்கு அழைத்தால் மறுபடியும் களமிறங்க தயார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...