Main Menu

பிரான்ஸின் சுகாதார ஊழியர்களுக்கு 8 பில்லியன் யூரோக்கள் சம்பள உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் போது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக, பிரான்ஸ் 8 பில்லியன் யூரோக்கள் அதிகமாக செலவழிக்க உள்ளது.

ஏழு வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘எங்கள் சுகாதார அமைப்புக்கான வரலாற்று தருணம்’ என இது பாராட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் காஸ்டெக்ஸ் கூறுகையில், ‘இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன் வரிசையில் இருந்தவர்களை இது முதலில் அங்கீகரிப்பதாகும்’ என கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் சுகாதார மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள் சராசரியாக 183 யூரோக்கள் உயரும்.

பகிரவும்...