Main Menu

மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவிப்பு!

மியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று, புதிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சாசா இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இராணுவ ஆட்சியை வேரறுப்பதே இந்த புதிய ஒற்றுமை அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் நீக்கப்பட்ட சட்டமியற்றுபவர்கள், இனக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடங்குகின்றனர்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 700க்கும் மேற்பட்ட மக்களை இராணுவத்தினர் கொன்றுள்ளனர்.

பகிரவும்...